
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும், டேனியல் பாலாஜி... நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இவருடைய இறப்புக்கு பலர் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில்... இன்னும் சிலர் சமூக வலைத்தளம் மூலமாக தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அப்படி இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலக நாயகன் கமல்ஹாசன், போட்டுள்ள எக்ஸ் பதிவில், "தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டுள்ள பதிவில்,"டேனியல் பாலாஜி இல்லை என்று கேட்பதற்கே மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு மிகசிறந்த நடிகர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு சென்றுவிட்டார். என்னுடைய இதய பூர்வமான அஞ்சலியை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் நானி எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், "மிகவும் சீக்கிரமாக சென்றுவிட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சகோதரரே என தெரிவித்துள்ளார்".
நடிகர் சந்தீப் கிஷன் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளதாவது, "நான் உதவி இயக்குநராக இருந்தபோது என்னிடம் எப்போதும் அன்பாக இருந்தவர் நீங்கள். நான் ஒரு ஆர்வமுள்ள நடிகன் என்பதை நீங்கள் உணர்ந்ததும் உங்கள் சிபாரிஸுடன் என்னை பல ஆடிஷன்களுக்கு அனுப்பி வைத்தீர்கள். உங்களையும் உங்கள் அழகான இதயத்தையும் எப்போதும் மிஸ் செய்வேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ஆர்யாவும், 'மிக விரைவாக எங்களை விட்டு போய்விட்டீர்களே சகோதரரே என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.