போட்டி போடத் தயாராகும் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ்!

 
Published : Sep 20, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
போட்டி போடத் தயாராகும் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ்!

சுருக்கம்

keerthi suresh and trisha samy 2 update

நடிகர் விக்ரம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ள  சாமி 2  திரைப்படத்தில், கதாநாயகிகளாக திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர்.

தற்போது திரிஷாவின் மார்க்கெட் டல்லடித்து விட்டதால், சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்குதான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக படக்குழுவினர் தெரிவிக்கும்போது... சாமி 2 படத்தில் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் சமமான நிலையில்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

முதல் பகுதியில் திரிஷா சம்மந்தப்பட்ட, காட்சிகள் இடம் பெறும் என்றும், இரண்டாம் பகுதியில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

திரிஷா பல ஹிட் படங்களைக் கொடுத்தாலும், சமீப காலமாக அவருக்கு பேர் சொல்லும் விதத்தில் நல்ல படங்கள் எதுவும் அமையவில்லை.  அதே போல் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த பைரவா திரைப்படம் கலவையான விமர்சனங்களைதான் பெற்றது. இது வரை சிவகார்த்திகேயனுடன் நடித்ததுதான் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது. எனவே இந்தப் படத்தில் திரிஷா மற்றும் கீர்த்தி இருவருமே போட்டிபோட்டு நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!