'மகளிர் மட்டும்' பட இயக்குனரைப் பாராட்டிய பெண் எம்.எல்.ஏ.

 
Published : Sep 20, 2017, 07:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
'மகளிர் மட்டும்' பட இயக்குனரைப் பாராட்டிய பெண் எம்.எல்.ஏ.

சுருக்கம்

Women MLA wish the Director Bramha

இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'மகளிர் மட்டும்' . இந்தப்படத்தில் '36 வயதினிலே' திரைப்படத்திற்குப் பிறகு ஜோதிகா முகமும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

80களில் கதாநாயகிகளாக நடித்த சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்தப் படம் பெண்கள் மத்தியில் அதீத வரவேற்பு பெற்றுள்ள நிலையில்  இப்படம் குறித்து எம்.எல்.ஏ பாலபாரதி  கூறியிருப்பதாவது: ‘‘யார் அந்த பிரம்மா? படம் மிக மிக அருமை, என தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.  

நான் பல ஆண்டுகள் பேசியும் யாருக்கும் புரியவில்லையே என நினைத்திருந்த பெண்ணியக் கருத்தை மிகுந்த எதார்த்தத்தோடு சித்திரித்திருந்தீர்கள். நல்ல கருத்தோடு அமைந்த நல்ல படம். அனைத்துப் பெண்களும் பார்க்கக்கூடிய படம் என இயக்குனர் பிரம்மா உட்பட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!