
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அணியினர் தேவதைகளாகவும் மற்றொரு அணியினர் பேயாகவும் மாறியுள்ளனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பேய் அணியைச் சேர்ந்தவர்கள், தேவதைகளை என்ன செய்தாலும் அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்; பேய்கள் மீது கோபப்படக்கூடாது.
தற்போது பேய்களாக ஆரவ், பிந்து மற்றும் ஹரீஷ் கல்யாண் உள்ளனர். தேவதைகளாக சுஜா, கணேஷ் மற்றும் சினேகன் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பேய்கள் அணியைச் சேர்ந்த ஆரவ் செம குத்தாட்டம் போடுகிறார், சுஜா பேய்களிடம் வந்து நீங்கள் பேய்; நான் தேவதை! எனக் கூறி பெருமை பேசுகிறார்.
உடனே ஆரவ் தலையணையை வைத்து சுஜாவை நச் என்று நான்கு அடி வைக்கிறார். பின் ஏதோ சுஜா வந்து பேச, அதற்கும் கையில் உள்ள தலையணையைக் கொண்டு சுஜா மேல் வீசி எறிந்து அடிக்கிறார். கணேஷ் மற்றும் சினேகன் தேவதைகளாக இருந்தும் அமைதியாக இருக்கும் நிலையில், சுஜா இவர்கள் மூவரிடமும் வலிய வந்து அடி வாங்கிக்கொள்வது பாயிண்ட்ஸ்களுக்காகத்தான் என்கிற சுஜாவின் சூழ்ச்சி வெளியாகியுள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.