சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்... வாடகை தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்..?

Published : Aug 30, 2021, 02:07 PM ISTUpdated : Aug 30, 2021, 02:08 PM IST
சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்...  வாடகை தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்..?

சுருக்கம்

சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரா 'மிமி' படத்தின் ரீமேக்கில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரா 'மிமி' படத்தின் ரீமேக்கில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மராத்தி மொழியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'Mala Aai வஹ்ஹாய்ச்சி'  என்கிற படத்தின் ரீமேக்காக வெளியான திரைப்படம் தான் 'மிமி' இந்த படம் அப்போதே தேசிய விருதையும் வாங்கியது. அதே போல் தெலுங்கிலும் இப்படத்தை 2013  ஆம்  ஆண்டு சிங்கிதம் சீனிவாசராவ் 'வெல்கம் ஒபாமா' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்தப்படமும் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

பாலிவுட் திரையுலகில் இயக்குநருமான லக்ஷ்மன் உடேகரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில், கதையின் நாயகியாக நடிகை க்ரித்தி சனோன் நடித்திருந்தார். பொதுவாகவே, காதல், ரொமான்டிக், மற்றும் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்துள்ள இவர் இந்த படத்தில், மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்த்திருந்தார். 

ஒரு வாடகைத் தாய் சந்திக்கும் சிக்கல்களை பற்றி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், ஓட்டலில் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும்  க்ரித்தி சனோன் எப்படி ஒரு வாடகை தாயாக மாற சம்மதிக்கிறார். அதுக்கு என்ன காரணம் என, பல்வேறு திருப்புமுனைகளுடன் இப்படம் சமீபத்தில் நெட் ஃபிலிப்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-மேக் செய்யும் முயற்சியில் படக்குழுவினர் கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மற்ற தகவல்கள் வெளியாகாத நிலையில், தொடர்ந்து கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த படத்திலும் நடிப்பார் என்பர் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகலாம். மேலும் இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஷ்ரேயா கோஷல் பாடிய சொப்பன சுந்தரி பாடல் வேற லெவெலுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகக்குறுகிய காலத்தில் 100 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!
மகளுக்காக நடிகையை ஸ்கெட்ச் போட்டு கடத்திய தயாரிப்பாளர்: திரையுலகில் பரபரப்பு