எந்த நடிகரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய சிம்பு..! வேற லெவலுக்கு தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Published : Aug 30, 2021, 11:26 AM IST
எந்த நடிகரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய சிம்பு..! வேற லெவலுக்கு தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

சுருக்கம்

நடிகர் சிம்பு இது வரை எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்த்தியுள்ளார். இதனை சிம்புவின் ரசிகர்கள் வேற லெவெலுக்கு ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.  

நடிகர் சிம்பு இது வரை எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்த்தியுள்ளார். இதனை சிம்புவின் ரசிகர்கள் வேற லெவெலுக்கு ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

நடிகர் சிம்புவுக்கு நடிப்புக்கு அவரின் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது வரை பலரும் தங்களுக்கு பிடித்த குழந்தை நட்சத்திரம் என்றால் அது சிம்பு தான் என கூறுவது உண்டு. அதே போல் சிம்புவிற்கு பெண் ரசிகைகளும் அதிகம், இவர் நடிக்காமல் நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு ரீ -என்ட்ரி கொடுத்தபோதும் இவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிம்புவின் கைவசம் தற்போது, 'வெந்து தணிந்தது காடு ' , 'பத்து தல' ஆகிய படங்கள் உள்ளன. மேலும், மஹா மற்றும் மாநாடு ஆகிய படங்கள் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் சிம்புவிற்கு தடையாக இருந்த ரெட் கார்டும் சமீபத்தில் நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

இதுஒரு புறம் இருக்க, தற்போது சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள சாதனையை தான் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து 315 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், ஒரு வருடத்திற்குள் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவு குறுகிய நாட்களுக்குள் எந்த நடிகருக்கும் இவ்வளவு ஃபாலோயர்ஸ் பின்தொடர்ந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய நாட்களில் சிம்பு செய்த சாதனையை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !