இயக்குனர் ஷங்கர் - சுபாஸ்கரன் திடீர் சந்திப்பு! ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டதா இந்தியன் 2 பிரச்சனை

Published : Aug 29, 2021, 07:53 PM IST
இயக்குனர் ஷங்கர் - சுபாஸ்கரன் திடீர் சந்திப்பு! ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டதா இந்தியன் 2  பிரச்சனை

சுருக்கம்

இந்தியன் 2 பிரச்சனை இழுபறியாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் பேசி தீர்க்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  

இந்தியன் 2 பிரச்சனை இழுபறியாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் பேசி தீர்க்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

​பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைத்து வந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றதால், இயக்குனர் ஷங்கர் ராம் சாரணை வைத்து இயக்க உள்ள படம் குறித்தும், அதை தொடர்ந்து.... விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான, 'அந்நியன்' படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் லைக்காவின் மனுவில் தெரிவிக்கப்பட்டு மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, விசாரணைக்கு வந்த போது,   'இந்தியன் 2 ' பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த நீதி பதிகள் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறி இருந்தார் ஷங்கர். அதே நேரத்தில் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காததால் இதுகுறித்து மேல்முறையீடு மனுவையும் தாக்கல் செய்தது. 

இந்த பிரச்சனை இழுபறியாக இருந்து வந்த நிலையில், தற்போது சென்னை வந்த சுபாஷ்காரனை, ஷங்கர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. சுமார் 1 மணிநேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, இருதரப்புக்கும் இடையே சுமூக முடிவு எட்டுப்பட்டதாகவும், இதை தொடர்ந்து, லைகா ஷங்கர் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து, ஷங்கரும் மீதமுள்ள 'இந்தியன் 2 ' பட காட்சிகளை முடித்து தருவதாக கூறியுள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anjana Rangan : வெள்ளை சேலை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கலக்கும் விஜே அஞ்சனா.. அழகிய போட்டோஸ்
Actress Ananya : கருப்பு உடையில் காந்த பார்வையில் ரசிகர்களை இழுக்கும்..'நாடோடிகள்' பட நடிகை அனன்யா போட்டோஸ்