விஜய்யை நேரில் பார்த்ததும்... குஷ்பு மகள்கள் செய்த செயல்..? இதை அவங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

Published : Aug 29, 2021, 06:18 PM IST
விஜய்யை நேரில் பார்த்ததும்... குஷ்பு மகள்கள் செய்த செயல்..? இதை அவங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

சுருக்கம்

விஜய்யின் தீவிர ரசிகர்களான தன்னுடைய இரு மகள்களும், விஜய்யை பார்த்ததும் என்ன செய்தார்கள் என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை குஷ்பு.  

விஜய்யின் தீவிர ரசிகர்களான தன்னுடைய இரு மகள்களும், விஜய்யை பார்த்ததும் என்ன செய்தார்கள் என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை குஷ்பு.

இந்திய சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி நடிகை குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

சட்டமன்ற தேர்தலில், ஆயிரம் விளக்கு பகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியை தழுவியதால், தற்போது... மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறி சீரியல், திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அவர் மறந்தது இல்லை. திருமணம் ஆகி குழந்தை பெற்றபின்பும் கூட, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும், ஒரு மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அதே போல் சோசியல் மீடியாவில் எப்போதுமே படு ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, எந்த ஒரு சந்தோஷமான தகவல்களையும் தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்பவர். அந்த வகையில் சமீபத்தில் கூட தன்னுடைய இளைய மகள், அனந்திதா பட்டம் பெற்ற புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய மகள்கள் குறித்து ரசிகர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தன்னுடைய இரண்டு மகள்களுமே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்றும், அவரை பார்க்க வேண்டும் என கூறியதால் ஒருமுறை விஜய்யின் வீட்டிற்கு இருவரையுமே அழைத்து சென்றேன். விஜய்யை பார்த்ததும் இருவரும் வெக்கப்பட்டு என் பின்னால் வந்து ஒளிந்து கொண்டார்கள் என கூறியுள்ளார். தன்னுடைய மகள்கள் இப்படி செய்ததை குஷ்புவே எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!