"ஒரு ரசிகராகவும் ஒரு சகோதரனாகவும் காத்திருக்கிறேன்!" - டாக்டருக்காக சிவகார்த்திகேயன்-நெல்சனுக்கு வாழ்த்து சொன்ன 'பிக்பாஸ்' கவின்!

Published : Dec 02, 2019, 11:18 PM IST
"ஒரு ரசிகராகவும் ஒரு சகோதரனாகவும் காத்திருக்கிறேன்!" - டாக்டருக்காக சிவகார்த்திகேயன்-நெல்சனுக்கு வாழ்த்து சொன்ன 'பிக்பாஸ்' கவின்!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹீரோ' படம், டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

 
'ஹீரோ' படத்தில் சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்த  சிவகார்த்திகேயன், புதிய படத்தில் டாக்கடராகிறார். யெஸ், அவர் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு 'டாக்டர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

எதிர்பார்த்தது மாதிரியே இந்தப் படத்தை, சிவகார்த்திகேயனின் நண்பரும், 'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநருமான நெல்சன் இயக்குகிறார். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் 'டாக்டர்' படத்துக்கு, 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தை, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனே தனது எஸ்.கே. தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிடுகிறார். 'ஹீரோ' படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணையும் 2-வது படம் இது.
நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயனும், நெல்சனும் புதிய படத்தில் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. 

ஒருவழியாக தற்போது, இருவரும் கூட்டணி சேர்ந்திருப்பதற்கு 'பிக்பாஸ்' புகழ் நடிகர் கவின் தனது வாழ்த்துக்களை, தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
அதில், "இறுதியாக சிவகார்த்திகேயன் அண்ணனும், நெல்சன் அண்ணனும் ஒன்றாக இணைந்து விட்டனர். 

ஒரு ரசிகராகவும், சகோதரனாகவும் காத்திருக்கிறேன்" என்ற கேப்சனுடன் 'டாக்டர்' படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோவையும் கவின் பகிர்ந்துள்ளார்.

 https://www.instagram.com/p/B5kqnmkhJt4/?utm_source=ig_web_copy_link

ஆரம்ப காலத்திலிருந்து சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோருக்கு நெருங்கிய நண்பராகவும், ஒரு சகோதரராகவும் இருப்பவர் கவின். சமீபத்தில் கூட, இந்த மூவரும் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. அத்துடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவின் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?