குடியரசு தினத்தையொட்டி ஜீவாவின் கொடி பறக்கும்! 'ஜிப்ஸி' ரிலீசை அறிவித்து ராஜு முருகன் அதிரடி!

Published : Dec 02, 2019, 09:44 PM IST
குடியரசு தினத்தையொட்டி ஜீவாவின் கொடி பறக்கும்! 'ஜிப்ஸி' ரிலீசை அறிவித்து ராஜு முருகன் அதிரடி!

சுருக்கம்

பல தடைகளை தாண்டி ஜீவா - ராஜுமுருகன் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஜிப்ஸி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'குக்கூ', 'ஜோக்கர்' படங்களைத் தொடர்ந்து, ராஜுமுருகனின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. 

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கம்யூனிச சித்தாந்தங்களைக் கொண்ட ஒரு நாடோடி பாடகனின் பயணம்தான் இந்தப் படம். 

'ஜோக்கர்' படத்தில் "என்னங்க சார் உங்க சட்டம்" என்று கேட்டு மத்திய, மாநில அரசுகளை அதிரவைத்த ராஜுமுருகன், 'ஜிப்ஸி' படத்தில் நேரடியாக மத்திய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்திள்ளாராம். அத்துடன், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் கிண்டலடிக்கும்படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாம். 

இதனால், சென்சார் பிரச்னையில் சிக்கிய 'ஜிப்ஸி' படத்துக்கு, நீண்ட போராட்டத்திற்குப்பின் 'ஏ' சான்றிதழ் வாங்கினார் இயக்குநர் ராஜுமுருகன்.
இதனால் வருத்தப்படாத அவர், "தப்பான படம் எடுத்து 'ஏ' சான்றிதழ் வாங்கவில்லை. நாட்டில் நடக்கும் தவறை தட்டிக்கேட்குற படத்தை எடுத்து 'ஏ' சான்றிதழ் வாங்கியிருக்கிறோம்" என மார்தட்டிக் கொண்டார்.

இந்த நிலையில், 'ஜிப்ஸி' படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல தடைகளைத் தாண்டி 'ஜிப்ஸி' படம், வரும் ஜனவரி 24ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. 

அத்துடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. "குடியரசு தினத்தையொட்டி இவன் கொடி பறக்கும் ஜனவரி 24 முதல்" என அசரடித்திருக்கும் இந்த 'ஜிப்ஸி' போஸ்டர், இணையத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
ஏற்கெனவே, படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஜிப்ஸி' படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?