
கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்னதாக நேற்றைய எபிசோடில் துர்காவிற்கு நாள் செய்ய வந்த பரமேஸ்வரி அவமானப்பட்டு திரும்ப சென்றுள்ளார். துர்காவின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் துர்காவிற்கு யார் தாலி கட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மண்டபத்திலிருந்து அவமானப்பட்டு வீட்டிற்கு சென்ற பரமேஸ்வரி பாட்டியிடம் கான்ஸ்டபிள் உண்மையை சொல்லிய நிலையில் அவர் சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல மண்டபத்திற்கு அழைத்து வருகிறார்.
ஆனால், கான்ஸ்டபிள் மற்றும் பரமேஸ்வரி இருவரும் பேசியதை முத்துவேல் கேட்டுவிடவே, எப்படியாவது அவரை போட்டு தள்ள திட்டமிட்டுள்ளார். மண்டபத்திற்கு வரும் போது மறைந்திருந்து கான்ஸ்டபிளை போட்டு தள்ளியுள்ளார். இதைத் தொடர்ந்து இது பற்றி சந்திரகலா சிவனாண்டியிடம் கேட்க, அதற்கு அதில் உண்மையில்லை என்று சிவனாண்டி பொய் சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு புறம் நடந்தாலும் மறுபுறம் கார்த்திக் நவீனை சந்தித்து எப்படியாவது உன்னை வெளியில் எடுத்துவிடுவேன். உனக்கும், துர்காவிற்கும் தான் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், மாப்பிள்ளை வீட்டார் ஒரு சீட்டிங் ஃபேமிலி என்று தெரிந்துவிட்டது. அதை அத்தையிடம் சொல்லி உண்மையை புரிய வைப்பேன் என்றார். ஆனால், நவீனை வெளியில் எடுத்த விஷயம் சந்திரகலாவிற்கு தெரியவர சிவனாண்டி அவரை தடுத்து நிறுத்த திட்டம் போடுகிறார். இப்படியெல்லாம் நடந்த நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.