ரொம்பவே சிம்பிளா நடந்த திருமண நிச்சயதார்த்தம்; விஷால் – சாய் தன்ஷிகா திருமணம் எப்போது?

Published : Aug 29, 2025, 06:16 PM IST
sai dhanshika and vishal engagement

சுருக்கம்

Vishal Sai Dhanshika Engagement : நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் விஷாலின் வீட்டிலேயே நடந்து முடிந்துள்ளது.

Vishal Sai Dhanshika Engagement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த செல்லமே படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்திற்கு பிறகு சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம் என்று பல படங்களில் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் திரைக்கு வந்த மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. இதே போன்று மத கஜ ராஜா படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படமாக அமைந்தது.

தற்போது விஷால் நடிப்பில் மகுடம் மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் தான் விஷால் இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டுள்ளார். விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமண நிச்சயதாத்தம் அவரது வீட்டில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்ததின் போது இருவரு மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாய் தன்ஷிகா சினிமாவில் கால் பதிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில் போதுமான வாய்ப்புகள் அமையவில்லை. அதோடு நடித்து வெளியான படங்களும் போதுமான அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. மனதோடு மழைக்காலம் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சாய் தன்ஷிகா, மறந்தேன் மெய் மறந்தேன், திருடி, கெம்பா, பேராண்மை, மாஞ்சா வேலு, லாபம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று 48 வயதான சாய் தன்ஷிகாவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவருக்கு வயது 35 ஆகிறது. தன்ஷிகா தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இன்று அண்ணா நகரில் உள்ள விஷாலின் வீட்டில் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரது குடும்பம் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் நடைபெற இருக்கிறது. அதுவும், நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிந்த உடன் விஷால் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இனிமேல் சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். சினிமால் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சியில் நடிக்காமல் இருக்க முடியாது. அதனால் முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!