
Anna Serial Today 765th Episode in Tamil : தமிழ் சின்னத்திரையில் இரவு 8 மணியிலிருந்து 8:30 மணி வரை ஜீ திரையில் பிரபலமான சீரியலாக ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சிவபாலன் தன் மனைவி வீராவை அழைத்து வர செல்கிறேன் என்று சௌந்தரபாண்டியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான். வீரா வேலைக்கு செல்லும் வழியில் மறைத்து தன் ஆசை மனைவிக்கு காதல் கடிதம் கொடுத்ததோடு இல்லாமல் எனக்கு ஒரு முத்தம் வேண்டும் என்று சிவபாலன் புலம்புகிறான்
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சௌந்தரபாண்டி தன் மகன் என்ன கேட்டான் என்பதை தெரிந்து கொள்ளாமல் வீராவிடம் சென்று அவன் என்ன கேட்டாலும் கொடு என்று சொல்கிறார். அதற்கு வீரா அவன் என்ன கேட்டான் என்று தெரியுமா என்று கேட்கிறாள் அதற்கு சௌந்தரபாண்டி அவன் எல்லாத்தையும் என்னிடம் சொல்லிவிட்டு தான் வந்துள்ளான் அப்படின்னு சொல்றார் வீரா கோபத்தில் இருவரையும் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள்.
இன்னொரு பக்கம் பரணி சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த வெங்கடேஷ் கண்விழித்துக் கொள்கிறான். மாலதி டீச்சரை கொன்றது வைஜெயந்தி தான் எனவும், அதோடு மாலதி டீச்சர் அண்ணன் ஜெயிலில் இருக்கிறான் அவன் தான் அறிவழகனை அடித்து இருக்கணும் என்று சொல்லி புலம்புகிறான் மற்றும் ரத்னாவிடம் நான் தப்பு செய்துவிட்டதாக கூறி தன்னை மன்னிக்குமாறு மன்னிப்பு கேட்கிறான். இந்த உண்மைகளை நான் எங்கு வேண்டுமானால் வந்து செல்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் நாடகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.