ஷூட்டிங் ஸ்பாட்டில்... சீயான் விக்ரமுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்!

By manimegalai aFirst Published Mar 20, 2021, 6:34 PM IST
Highlights

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், தன்னுடைய பிறந்தநாளை தற்போது இயக்கி வரும் 'விக்ரம் 60 ' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் ஆகியோருடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், தன்னுடைய பிறந்தநாளை தற்போது இயக்கி வரும் 'விக்ரம் 60 ' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் ஆகியோருடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நாளைய இயக்குனர்' என்னும் குறும்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் பிரபலமடைந்தவர் கார்த்திக் சுப்புராஜ். தொடக்கத்திலேயே இவருடைய குறும்படங்களுக்கு நடுவர்களிடம் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. பின்னர் இதன் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து திரைப்படங்களையும் இயக்கும் முயற்சியில் இறங்கினார்.

அந்த வகையில் இவர் முதலில் இயக்கிய திரைப்படம் 'பீட்சா' மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட, இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த  படத்தை தொடர்ந்து சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, ஆகியோர் நடித்த 'ஜிகர்தண்டா' படத்தை இயக்கினார்.  வழக்கம் போல் தன்னுடைய பாணியிலேயே வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், ஸ்டைலை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர். அதேபோல் மெர்குரி எனும் வசனம் இல்லாத திரைப்படத்தை இயக்கிய புதுமை படைத்தார் கார்த்திக் சுப்புராஜ். இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கி இருக்கும் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கமர்சியல் சினிமா ரசிகர்களும் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை எடுத்து முடித்த கையேடு, நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகள் துருவை வைத்து, விக்ரமின் 60வது படத்தை இயக்கி வருகிறார். கேங் ஸ்டார் கதையில் உருவாகும் இந்தப்  படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், கார்த்திக் சுப்புராஜ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

click me!