சூர்யா பிறந்தநாளுக்கு கார்த்தி கொடுத்த சர்பிரைஸ்..! வைரலாகும் வீடியோ..!

Published : Jul 23, 2021, 10:41 AM IST
சூர்யா பிறந்தநாளுக்கு கார்த்தி கொடுத்த சர்பிரைஸ்..! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, நடிகரும், சூர்யாவின் சகோதரருமான கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, நடிகரும், சூர்யாவின் சகோதரருமான கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே,  மாஸாக காமன் டிபி -யை வெளியிட்டு கொண்டாட துவங்கி விட்டனர். மேலும் இவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வரும் '40 ' ஆவது படத்தின் டைட்டில் 'எதற்கும் துணிந்தவன்' வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இதனை ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் தாறுமாறாக ட்ரெண்டாக்கி வருகிறார்கள். மேலும் சூர்யாவின் பிறந்தநாளை அவரது குடும்பத்தினரும் சிறப்பாக பிரமாண்ட கேக் வெட்டி நேற்று இரவு கொண்டாடியுள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்பரேஷன் என கூறி நடிகர் கார்த்தி தன்னுடைய சகோதரருக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதில் சூர்யாவின் அதிரடி காட்சிகள் மற்றும் அவரது பேட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது கார்த்தி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அதே போல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யா நடிகர் என்பதை தாண்டி, கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு மாணவர்களின் கல்வி கனவை பூர்த்தி செய்து வருகிறார். மேலும் பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபடுவதோடு, தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை வெளிப்படையாக அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு ரசிகர்களின் பலம் நாளுக்கு நாள்... கூடி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்