வாக்கிங் சென்ற நடிகைக்கு நேர்ந்த ஷாக்கிங் சம்பவம்... பைக்கில் பறந்த மர்ம நபர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 22, 2021, 07:35 PM IST
வாக்கிங் சென்ற நடிகைக்கு நேர்ந்த ஷாக்கிங் சம்பவம்... பைக்கில் பறந்த மர்ம நபர்...!

சுருக்கம்

வாக்கிங் சென்ற பிரபல நடிகையிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் செயின் பறிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிரபல நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போன் மர்ம நபர்களால் பறித்துச் செல்லப்பட்டு, சில வாரங்களிலேயே போலீசாரால் மீட்கப்பட்டது. 

தற்போது வாக்கிங் சென்ற பிரபல நடிகையிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பை தாதர் பகுதியில் வசித்து வருபவர், பிரபல மராத்தி நடிகையான சவிதா மல்பேகர். இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிவாஜி பார்க்கில் வாக்கிங் சென்று கொண்டிருந்த சவிதாவிடம் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு பறந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அந்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 

வாக்கிங் சென்று கொண்டிருந்த சவிதாவிடம் திருடன் டைம் கேட்டுள்ளான். அப்போது அவர் தன்னிடம் வாட்ச் இல்லை என்று சொல்ல, செல்போனில் பார்த்து சொல்லுங்கள், அவர் அதற்கு மறுப்பு கூறிவிட்டு தொடர்ந்து நடந்துள்ளார். அப்போது பின்னாலேயே வந்த அந்த நபர் அவரை பின்பக்கமாக தோளில் நின்று தட்டியுள்ளார். சவிதா திரும்பி பார்த்த போது யாருமே இல்லை. திடீரென அவர் முன்னால் வந்து நின்ற அந்த நாள், சவிதா சுதாரிப்பதற்குள் கழுத்தில் கிடந்த செயினை பறித்துக்கொண்டு பைக்கில் பறந்துவிட்டான். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டே போலீசார் திருடனைக் கைது செய்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!