ரத்தம் சொட்ட சொட்ட கையில் வாளுடன் மாஸாக நிற்கும் சூர்யா! 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published : Jul 22, 2021, 06:31 PM ISTUpdated : Jul 22, 2021, 06:41 PM IST
ரத்தம் சொட்ட சொட்ட கையில் வாளுடன் மாஸாக நிற்கும் சூர்யா! 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சுருக்கம்

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சற்று முன் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக அதனை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.  

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சற்று முன் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக அதனை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. ஆக்ஷன் காட்சிகளை கூட அசால்டாக நடித்து மிரட்டும் சூர்யா நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களுமே  ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சூர்யாவின் 40வது படம் மற்றும் வாடிவாசல் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

ஏற்கனவே, சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் நடிப்பில் நடித்து வரும் 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘சூர்யா 40’  படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 

அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் பெயர் 'எதற்கும் துணிந்தவன்' என்பதை அறிவித்துள்ள படக்குழு... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். வேஷ்டி சட்டையில் தோன்றும் சூர்யா... கையில் வாள், துப்பாக்கி போன்றவற்றை வைத்து மிரட்டுகிறார். ஒருவரை அடித்து இழுத்து செல்வது, கண்ணாடிகள் உடைந்து சிதறும் காட்சிகள், கையில் வாளுடன் சூர்யா ரத்தம் சொட்ட சொட்ட நிற்பது என மாஸ் காட்டியுள்ளார்.

சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் நடிக்கிறார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்
விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்