
நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய உடல் ஃபிட்னசின் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக, யோகா செய்தபடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது, கொழு கொழு வென்று இருந்தார். ஆனால் 'மகாநடி' படத்திற்கு பின் தன்னுடைய உடல் எடையை குறைத்து பாலிவுட் திரையுலகில் நடிக்க சென்றார். ஆனால் ஒரு சில காரணங்களால் பாலிவுட் படத்தில் நடிக்க முடியாமல் போகவே, மீண்டும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையின் நாயகியாகவும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
பல இயக்குனர்கள் அடுத்தடுத்து இவரிடம் கதை கூறி வந்தாலும், கதைக்கும், தன்னுடைய கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு மட்டுமே கீர்த்தி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார். அந்த வகையில் தற்போது இவரது கைவசம், தமிழில் சாணி காகிதம் உட்பட, ஒரு தமிழ் படம் மற்றும் ஒரு மலையாள படம் உள்ளது. அதே போல், இவர் நடித்து முடித்துள்ள 'மரைக்காயர்' , 'குட் லக் சகி' மற்றும் 'அண்ணாத்த' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளது.
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மட்டும் இன்றி, எங்காவது வெளியில் செல்லும் போது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்... கீர்த்தி சுரேஷ் ராமேஸ்வரம் சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து தன்னுடைய ஃபிட்னஸ் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள யோகா வீடியோ வைரலாக பார்க்க பட்டு வருகிறது. ஒன்றை காலில் நின்றபடி யோகா செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த வீடியோவும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.