
பாலிவுட் திரையுலகை சேர்ந்த மூன்று நடிகைகளை, வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி ராஜ் குந்த்ரா ஆபாசப்பட எடுத்ததாக நடிகைகள் புகார் அளித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா... செயலியில் வெளியிட ஆபாசப்படம் தயாரித்ததாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 3 நடிகைகளை ராஜ் குந்த்ரா தங்களை வலுக்கட்டாயமாக, ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக புகார் கொடுத்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நடிகைகள் யார் என்கிற விபரத்தை இதுவரை, போலீசார் வெளியிடவில்லை. ஆனால் அவர்கள் மூவருமே, பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகள் என கூறப்படுகிறது... இவர்கள் மூவரும் ராஜ் குந்த்ரா தங்களை வலுக்கட்டாயமாக, கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆபாச பட விவகாரம் காட்டு தீ போல் பாலிவுட் திரையுலகில் கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், மேலும் சில நடிகைகளும் ராஜ் குந்த்ரா மீது புகார் கொடுக்க வாய்ப்புள்ளதாகவே பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஆபாச பட விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து வெளியான தகவலில், இந்த வழக்கில் இதுவரை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்புள்ளது என கண்டுபிடிக்க பட வில்லை என கூறப்படுகிறது. இதுபோன்று ஆபாச படம் தயாரித்து வெளிநாட்டு செயலிகளை விற்பனை செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு மட்டும் ராஜ் குந்த்ரா 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை சம்பாதித்து வந்ததாகவும், தற்போது இவரது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.