அகோரியாக மாறிய முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா!

Published : Nov 17, 2018, 02:45 PM IST
அகோரியாக மாறிய முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா!

சுருக்கம்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியும் நடிகையுமானகுட்டி ராதிகா தற்போது அகோரியாக மாறியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியும் நடிகையுமானகுட்டி ராதிகா தற்போது அகோரியாக மாறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் நடிகை குட்டி ராதிகா. சில காலம் திரையுலகின் பக்கம் வராமலே இருந்த இவர்... திடீர் என குழந்தையுடன் வந்து, இந்த குழந்தையின் தந்தை தற்போதைய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி என கூறினார்.

குமாரசாமியும், இவர் கூறியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல்... இது தன்னுடைய குழந்தை என்றும் குட்டி ராதிகா தன்னுடைய இரண்டாவது மனைவி என்றும் கூறினார். 

இந்நிலையில் சில காலம் அவருடைய மகள் ஷாமிகாவை பார்த்து கொள்வதற்காக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர்... மகள் வளர்ந்து விட்டதால் மீண்டும்  நடிக்க முடிவு செய்திருக்கிறார். 

அந்த வகையில் தற்போது  பைராதேவி என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார். கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் குட்டி ராதிகா பெண் அகோரி வேடத்தில் நடிக்கிறார்.

இதற்காக குட்டி ராதிகா  காசியில் ஒரு வாரம் வரை தங்கியிருந்து பெண் அகோரிகளின் நடவடிக்கைகள், மேனரிசங்கள் ஆகியவற்றை கற்றுக் கொண்டு நடித்து வருகிறாராம். இந்த படத்தில் இவரை தவிர ரமேஷ் அரவிந்த், ரங்கயாணா ரகு, ரவிசங்கா, சுசித்ரா பிரசாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீஜெய் இயக்குகிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி
தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!