ஏறிக்குதித்த விஷால், ஏன் எகிறிக் குதிக்கவில்லை?

By vinoth kumarFirst Published Nov 17, 2018, 2:33 PM IST
Highlights

சென்னை கோபாலபுரத்திலுள்ள ஒரு அப்பார்ட்மெண்டின் நாலாவது மாடிக்கு மிட்நைட்டில் வந்த விஷால், அதிகாலை நாலு மணிக்கு பின்வாசல் வழியாக, சுவர் ஏறி குதித்து ஓடினார்! என்று விஸ்வதர்ஷினி எனும் பெண் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவுக்கு விஷால் தரப்பு ரியாக்ட் செய்யாமல் இருப்பது  சந்தேகத்தை கிளப்புகிறது! 

* கஜா புயல் விஷயத்தில் அரசாங்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு,  மிக பெருமளவில் சேதங்கள் தவிர்க்கப்பட்ட விதத்தை எதிர்க்கட்சிகள்  கூட மனம் திறந்து பாராட்டியுள்ளன. ஆனால் ஆளுங்கட்சிக்குள்ளேதான் ஈகோ புயல். அதாவது பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார், என்னமோ மொத்த புயலையும் தானும், தன் துறையுமே தனியே தலையில் தூக்கி வைத்து தமிழகத்தை தாண்டி தள்ளிவிட்டது போல் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவிட்டார், முதல்வரின் பொதுப்பணித்துறையின் உழைப்பு கூட இவரால் பின் தள்ளப்பட்டுவிட்டது என்று அமைச்சரவைக்குள் புலம்பல் எழுந்துள்ளதாம். (அம்மா மட்டும் இருந்திருந்தால், செருப்பே போடாம நாகை கடற்கரையில் நின்னு புயலை தள்ளியிருப்பாரு உதய்!)

* ஆபத்தான கட்சியா பி.ஜே.பி? எனும் விமர்சன விவகாரத்தில் ரஜினியின் பல்டி பதில்களுக்கு டெல்லியிலிருந்து வந்த டைரக்‌ஷனே காரணம்! என்று தகவல் வெளியாகியிருந்தது. அந்த டைரக்டர் வேறு யாருமல்ல வழக்கம்போல் நிதின் கட்கரிதான். மோடி அமைச்சரவையில் ரஜினியோடு ஏக நெருக்கத்தில் இருப்பவர் கட்கரி. அவரை வைத்துத்தான் இந்த ஆபரேஷனை நடத்தி முடித்தாராம் பிரதமர். (க்கும்! ‘ஜெயித்தே ஆகவேண்டிய காரணத்தால் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளிவிட்டோம்’ன்னு சொல்லி சொந்த கட்சிக்கே சூனியம் வெச்ச கட்கரிய போயி இவர்ட்ட டீல் பண்ண வெச்சா, விளங்கிடும்ஜி!)

* நான் படங்களை இயக்குவதற்கு காரணமே இளையராஜாதான். இதை எந்தவித வெட்கமும் இல்லாமல் சொல்லுவேன்! என்று அதிரிபுதிரியாய் பேசியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். (தல, இதை அப்படியே போயி இளையராஜா முன்னாடி நின்னு நீங்க பேசிப்பாருங்க, அப்புரம் ஒத்துக்குறோம் நீங்க ஒரு கெத்து பிசாசுன்னு.)

* சென்னை கோபாலபுரத்திலுள்ள ஒரு அப்பார்ட்மெண்டின் நாலாவது மாடிக்கு மிட்நைட்டில் வந்த விஷால், அதிகாலை நாலு மணிக்கு பின்வாசல் வழியாக, சுவர் ஏறி குதித்து ஓடினார்! என்று விஸ்வதர்ஷினி எனும் பெண் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவுக்கு விஷால் தரப்பு ரியாக்ட் செய்யாமல் இருப்பது  சந்தேகத்தை கிளப்புகிறது! இது பொய் என்றால் இந்நேரம் விஷாலோ அவரது தரப்பினரோ எகிறிக் குதித்திருப்பார்களே! ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? என்று அதே ஃபேஸ்புக்கில் சிலர் நோண்டி வருகின்றனர். (விஷாலே ஏறித்தான் குதிக்கிற அளவுக்கு அவ்ளோ ஒசரமாவா இருந்துச்சு அந்த காம்பவுண்டு சுவரு?)

* முன் தெரிவிப்பு இல்லாமல் வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் தன் மாநிலத்துக்குள் நுழைய கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தடை விதித்திருக்கிறார். (ஏமண்டி, அப்படியே தெலுங்கு தேசம் கூட்டணியை தவிர வேற எந்த கட்சிக்கும் ஓட்டு போடமாட்டோமுன்னு சத்தியம் பண்ற மக்கள் மட்டுமே இங்கே வாழலாம்!ன்னு ஆர்டர் போட்டுடுங்க. ஜனநாயகம் வெளங்கிடும்.)

click me!