
சிம்புவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்....! இனி வேற லெவல் தான்...
நடிகர் சிம்பு தற்போது செக்க சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கும் வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட நடிகர்களும், ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருகின்றனர்
தற்போதைக்கு சிம்பு தன் கையில் வைத்துள்ள படம் இது மட்டுமே...
இந்நிலையில் கர்னாடக மாநிலத்தில் சிம்புக்கு பெரும் வரவேற்பு உள்ளது. தயாரிப்பாளர்கள் சிம்புவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு காரணம் காவிரி பிரச்சனை விஷ்வ ரூபம் எடுக்கும் போது கர்னாடக மக்களிடம் காவிரி தண்ணீரை கேட்ட விதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது
அவருடைய பேச்சை கேட்ட கர்னாடக மக்கள் மனதில் சிம்பு தனி இடத்தை பிடித்தார்.
சிம்புவை பற்றி அவ்வப்போது சில வம்புகள் வந்தாலும், சமீபத்தில் சிம்புவின் நடவடிக்கையில் பெரும் மாற்றம காண முடிகிறது.
இந்த மாற்றத்தை பற்றி நடிகர்களும் சில கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தான், கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளார் சிம்பு
மேலும் இதற்கு முன்னதாக, இருவடெல்லவா பெட்டு என்ற படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடி உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் சிம்புவை மேலும் பல படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.