மந்தைவெளியிலிருந்து சென்று ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக்...!

First Published May 25, 2018, 2:00 PM IST
Highlights
tamil person turn to hollywood music director


சுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையின் வசீகரத்திற்கு உள்ளாகி இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.

தனிப்பட்ட பாடல்களின் மூலம் தனது இசை பயணத்தை அவரது நண்பர் ௮க்‌ஷயுடன் கல்லூரி நாட்களில் தொடங்கிய பிரித்விக், இப்பயணத்தை தொடர்ந்து , தனித்துவமான தனது இசையால் பலரை கவர்ந்துவருகிறார். அக்‌ஷய் இப்போது ஒரு சார்ட்டர்ட் அக்கௌடண்ட் .

சமையல் மந்திரம் (தமிழ் இணையதள படம்), சுவீடிஷ் மொழி படம், அமெரிக்க வெப் சீரியஸ் என பிசியாக இருக்கும் ப்ரித்விக் "ஓன் 23" எனும் ஹாலிவுட் டாக்குமென்ட்ரி படத்திற்கு சமீபத்தில் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 4, 2018 வெளியான இந்த டாக்குமென்ட்ரியின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற 30 திரைப்பட விழாக்களில் இந்த படமும், படத்தின் இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

பெர்லினில் நடைபெற்ற அரவுண்ட் தி வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருதுக்கு  பரிந்துரை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண்,ஆலப் ராஜு மற்றும் புதிய இளம் பாடகர்கள் ஸ்ருதிலயா, தீ தேவன் ஆகியோர் பாடிய இசை ஆல்பத்தை விரைவில் பிரபல இசை கம்பெனியின் மூலம் வெளியிடவுள்ளார். ப்ரித்விக்கும் பாடியுள்ளார் .

இவர் முறையே கர்நாடக சங்கீதம் ஹரீஷ்யிடம், மேற்கத்திய இசை தியரி திரு . அகஸ்டின் பால் , பியானோ,  ம்யூசி ம்யூசிக்கல்ஸ் கிரீஷிடமும் பயில்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரித்விக் உலக அளிவில் மேன்மேலும் பல உயர்தர இசையை மக்களுக்கு அளித்து இசைக்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்கிறார்.

click me!