’கர்ஜனை’படத்தில் த்ரிஷா ஹீரோயினாக அல்ல ஹீரோவாக நடித்திருக்கிறார்...அதெப்பிடிங்க?...

Published : Jul 09, 2019, 03:08 PM IST
’கர்ஜனை’படத்தில் த்ரிஷா ஹீரோயினாக அல்ல ஹீரோவாக நடித்திருக்கிறார்...அதெப்பிடிங்க?...

சுருக்கம்

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவரும் நிலையில் ‘கர்ஜனை’படத்தில் த்ரிஷா முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இணையான ஒரு கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன.  

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவரும் நிலையில் ‘கர்ஜனை’படத்தில் த்ரிஷா முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இணையான ஒரு கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன.

 தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபாலும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளதால் கர்ஜனை எதிர்பார்ப்புள்ள படமாகியுள்ளது. இப்படத்தில் திரிஷாவோடு வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித்பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்துப்பேசிய இயக்குநர் சுந்தர் பாலு “செய்யாத தவறுக்கான பழி நம்மீது விழுந்தால் நமக்கு கோபம் வருமல்லவா. அந்தக் கோபம் தான் கர்ஜனை. செய்யாத தப்பிற்கு திரிஷாவின் காதலர் மேல் பழி வர அவர் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். அதில் இருந்து அவரை மீட்டு வரப்போராடும் திரிஷா அந்தப் பிரச்சனையில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். பின் கர்ஜித்து அவர் வில்லன் கூட்டத்தை பழிக்குப்பழி வாங்குவது தான் படத்தின் சாராம்சம். பெரிய ஹீரோக்கள் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்து வரும் திரிஷா என் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததிற்கு காரணம் படத்தின் கதைதான். செய்யாத தவற்றால் ஒரு இழப்பைச் சந்திக்கும் அவர் பழிக்குபழி வாங்குவதிலும் ஒரு நியாயம் இருக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நினைத்தே திரிஷா நடித்துள்ளார். நிச்சயம் திரிஷாவின் திரைவாழ்வில்  இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!