’பிக்பாஸ் நடிகைகள் அத்தனைபேரும் என்னைக் காப்பி அடிக்கிறார்கள்’...ஓவராய் ஃபீல் ஆகும் ஓவியா...

Published : Jul 09, 2019, 02:35 PM IST
’பிக்பாஸ் நடிகைகள் அத்தனைபேரும் என்னைக் காப்பி அடிக்கிறார்கள்’...ஓவராய் ஃபீல் ஆகும் ஓவியா...

சுருக்கம்

‘பிக்பாஸ் நிகழ்ச்ச்சியில் கலந்துகொள்ளுக்ம் நடிகைகளில் பெரும்பாலானோர் என்னைக் காப்பியடித்து புகழடையலாம் என்று நினைக்கிறார்கள். தங்கள் இயல்புக்கு ஏற்ப அவர்கள் நடந்துகொள்ளவேண்டும்’என்று டிப்ஸ் தருகிறார் முன்னாள் பிக்பாஸ் நடிகை ஓவியா.


‘பிக்பாஸ் நிகழ்ச்ச்சியில் கலந்துகொள்ளுக்ம் நடிகைகளில் பெரும்பாலானோர் என்னைக் காப்பியடித்து புகழடையலாம் என்று நினைக்கிறார்கள். தங்கள் இயல்புக்கு ஏற்ப அவர்கள் நடந்துகொள்ளவேண்டும்’என்று டிப்ஸ் தருகிறார் முன்னாள் பிக்பாஸ் நடிகை ஓவியா.

தனது ‘களவாணி 2’ரிலீஸ் தொடர்பாக அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் ஓவியா பேசும்போது,’சினிமாவை  அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானா உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.

எதிர்காலத்துல கேரளாவுல செட்டில் ஆகுற எண்ணமெல்லாம் எனக்கு இல்ல. எனக்கு தமிழ்நாடு தான் எல்லாம். இந்த மாநிலத்தை விட்டு எங்கும் செல்லமாட்டேன். தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை இது. நான் நல்லது செய்வதாக இருந்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். தமிழ் ரசிகர்கள் தான் எனக்கு அதிகம்.அதே மாதிரி ஒரே மாதிரியான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டவேண்டும். 90 எம்.எல்., காஞ்சனா, களவாணி 2 இந்த 3 படங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்ததா? அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறேன். மலையாள படம் ஒன்றும் தயாராகிவிட்டது’என்றார்.

 அடுத்து பிக்பாஸ் 3 குறித்து கேள்வி எழுப்பியபோது,’ நான் கலந்துகொண்டது பிக்பாஸ் முதல் பாகத்தில். அப்போது எந்த ஐடியாவும் இல்லாமல் சென்றேன். வெளியில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதை செய்தேன். சுதந்திரமாக இருந்தேன். அதனால் தான் அது மக்களுக்கு பிடித்து போனது. இப்போது அப்படி இல்லை. என்னை காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பதிலாக இயல்பாக இருந்தாலே போதும்’என்கிறார் ஓவியா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்