
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான நடிகை கரீனா கபூர் கான் மற்றும் உயிர் தோழி அம்ரிதா அரோரா ஆகியோர், கொரோனா அறிகுறிகள் தென்படவே... திங்கள்கிழமை (டிசம்பர் 13) கோவிட்-19 க்கு தங்களை உட்படுத்தி கொண்டபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்து விட்டதால், பார்ட்டி, பப் போன்றவற்றில் மீண்டும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர் நடிகர் நடிகைகள். அதிலும் பாலிவுட் திரையுலகினர் பற்றி சொல்லவே வேண்டாம்... எதற்கெடுத்தாலும் அதனை பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். அந்த வகையில் சமீப காலமாகவே, கரீனா கபூர் கான், மற்றும் அவரது தோழியான அம்ரிதா அரோரா ஆகியோர், கொரோனா பற்றி எந்த பயமும் இன்றி, சரியான விதிமுறைகளை பின்பற்றாமல் பார்ட்டிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், மும்பையில் நடிகர் அனில் கபூரின் மகள் ரியா கபூர் நடத்திய பார்ட்டிலும் இவர்கள் கலந்து கொண்டு என்ஜாய் செய்தனர். சமேலும் இந்த பார்ட்டியில் கரிஷ்மா கபூர், மலைக்கா அரோரா, கரீனாவின் மேலாளர் பூனம் தமானியா மற்றும் மசாபா குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களுக்கு லேசான சளி பிரச்சனை இருந்ததை தொடர்ந்து, இவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து, பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கரீனா மற்றும் அம்ரிதாவுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களை ஆர்டிபிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை கரீனா கபூருக்கும், அவரது தோழிக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் , மும்பையில் உள்ள கரீனா கபூர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.