
இந்தியன், விக்ரம் என படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கமல்.
இவரைத்தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டு விளங்கும் நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவரது அதிரடி சண்டை காட்சியை பார்த்து ரசிப்பதற்கு தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நடிப்பை தாண்டி, திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது, கதை எழுதுதல், மற்றும் பட விநியோகம் என திரைப்பட துறையின்ஆல்ரவுண்டர் என்றும் இவரை கூறலாம். அதே போல் சுமார் 5 திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சாகச நிகழ்ச்சியான 'சர்வைவர்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். 'மரைக்காயர்' படத்தை தொடர்ந்து தற்போது இரண்டு தமிழ் படங்கள் மற்றும் ஒரு மலையாள படத்தில் பிசியாக அர்ஜுன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்; கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமை படுத்தி கொண்டுள்ளதாகவும், தன்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் மாஸ் அணிவதை புறக்கணிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.