
அகில இந்திய அளவில் இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். ’கோபக்கார இந்திய இளைஞன்’ என்ற எண்பதுகளின் சமூக சூழலுக்கு ஏற்றவாறு தன்னை சினிமாவில் கட்டமைத்துக் கொண்டதால் அசுர வளர்ச்சி அடைந்தார் அமிதாப். அன்று முதல் இன்று வரை அவர் நடிக்கும் படங்கள் என்றால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக தற்போது 79 வயதிலும், விளம்பர படங்கள், திரைப்படங்களில் சிறப்பு தோற்றம், பின்னணி குரல் கொடுப்பது என இயங்கிக் கொண்டே இருக்கிறார் அமிதாப். அவர் என்ன செய்தாலும் இந்திய ஊடகங்களுக்கு அது தலைப்புச் செய்திதான். தற்போது சினிமா அல்லாத ஒரு செய்திக்காக தலைப்புச் செய்தி ஆகியுள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு மும்பை அந்தேரி பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் வீடு உள்ளது. இந்த வீட்டை வாங்கிய புதிதில் அமிதாப் சில ஆண்டுகள் இதில் வசித்து வந்தார். தற்போது இந்த அந்தேரி அபார்ட்மெண்டை வாடகைக்கு விட்டுள்ளாராம் அமிதாப். அதன் வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகை, யார் அதை வாடகைக்கு எடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ’நேனு ஒக்கடினே’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமாகி, நடிக்கத் தெரிந்த ஒரு சில ஹீரோயீன்களில் ஒருவராக பாலிவுட்டில் கலக்கி வரும் கீர்த்தி சனோன் தான் அமிதாப்பின் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். சமீபத்தில் கீர்த்தி சனோன் நடிப்பில் அமேசான் ஓடிடியில் வெளியான வடகைத் தாய்மார்களின் பிரச்சனைகளை பேசும் ‘மிமி’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இதுவரையில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த கீர்த்தி சனோன், தனது புதிய வெற்றியுடன் கொஞ்சம் பரபரப்பையும் சேர்க்க நினைத்தாரோ என்னவோ.. 60 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்து அமிதாப் பச்சனின் அந்தேரி அபார்ட்மெண்டில் வாடகைக்கு குடி புகுந்துள்ளார். மாதம் 10 லட்ச ரூபாய் வாடகையாம் இந்த டியூப்ளே அபார்ட்மெண்ட்டுக்கு. பொதுவாக அந்தேரி பகுதியில் டியூப்ளே வகை அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு 3 முதல் 4 லட்சம் வரை மட்டுமே வாடகையாம். ஆனால், இது அமிதாப் பச்சனின் வீடு என்ற பெருமைக்காகவே 10 லட்சம் வாடகை என்கிறார்கள். பாலிவுட்டில் பணியாற்றும் நடிகைக்கு அமிதாப்பின் வீட்டில் வசிக்கிறேன் என்று சொல்வது ஆஸ்கர் விருது வாங்கியதைப் போல. எனவே கொஞ்சமும் யோசிக்காமல் அங்கு க்டியேறிவிட்டாராம் கீர்த்தி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.