ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..யதார்த்த வாழ்க்கையின் நாயகன்...

 
Published : Oct 18, 2016, 01:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..யதார்த்த வாழ்க்கையின் நாயகன்...

சுருக்கம்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு... யதார்த்த வாழ்க்கையின் நாயகன்...

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் இன்று...

அவர்தன் அனுபவ பாடங்களை, பாடல்கள் மூலம் ஒரு தலைமுறைக்கே எளிமையாய் புகட்டியவர் கண்ணதாசன்...

"கலங்காதிரு மனமே...

உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே..."

என தன் முதல் பாடலிலேயே நம்பிக்கையோடு கலைப்பயணத்தைத் துவக்கியவர் அவர்.

நம் வாழ்வின் முக்கிய தருணங்கள் அனைத்திற்கும் கண்ணதாசனின் ஏதேனும் ஒரு பாடல் பொருந்துவதாக இருக்கும். பாட்டுடைத் தலைவன் கவியரசர் கண்ணதாசன், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி அவரே எழுதிய கவிதை இதோ...

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 

ஒரு கோலமயில் என் துணையிருப்பு

இசை பாடலிலே என் உயிர் துடிப்பு 

நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

 

காவியத் தாயின் இளைய மகன்

காதல் பெண்களின் பெருந்தலைவன்- நான்

காவியத் தாயின் இளைய மகன் 

காதல் பெண்களின் பெருந்தலைவன்

பாமர ஜாதியில் தனி மனிதன்- நான்

படைப்பதனால் என் பேர் இறைவன்

 

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் 

மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் 

மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்

நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 

நிலையிலும் எனக்கு மரணமில்லை

 

-கவியரசு கண்ணதாசன் 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!