
பொதுவாகவே ஒரு படத்திற்கு பலம் சேர்ப்பவர்கள் காமெடி நடிகர்கள் தான், அப்படி ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனி சிறப்பு உண்டு.
சாதாரண நாட்களில் வெளிவரும் படங்களுக்கே எதிர் பார்புகள் அதிகம் இருக்கும், அந்த வகையில் தீபாவளி ரிலீஸ் படங்கள் என்றால் டபுள் சந்தோஷம் தான்.
இந்த தீபாவளிக்கு வெளிவரும் படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர்கள் பற்றி பார்க்கலாமா.
காமெடிக்கு பெயர் போனவர்கள் என்றால், சந்திரபாபு, நாகேஷ்,செந்தில், கவுடமணிக்கு பிறகு மனதில் நிற்பவர்கள், வடிவேலு மற்றும் விவேக் தான்.
இந்த தீபாவளிக்கு இவர்கள் இருவரும் நடித்த படங்கள் பல வருடத்திற்கு பிறகு வெளிவர இருந்தது , ஆனால் கார்த்தியின் காஷ்மோரா வருவதால், விஷால் தான் நடித்த கத்தி சண்டை படத்தை கிடப்பில் போட்டதால் வடிவேலுவின் காமெடியை தீபாவளி அன்று பார்க்க மிஸ் பண்ணிவிட்டனர் ரசிகர்கள்.
கார்த்தி நடித்த காஷ்மோரா படத்தில், கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கிறார் விவேக், அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கண்டிப்பாக விவேக்கின் காமெடிக்கு குறைவிருக்காது என கூறியுள்ளனர் படக்குழு.
அதே போல் முதல் முறையாக டபுள் ரோல்லில் மாஸசாக களம் இறங்க தயாராக இருப்பவர், தனுஷ். இவர் நடித்து வரும் கொடி படத்தில் இரண்டு காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர் அவர்கள் வளர்த்து வரும் காமெடி நடிகரான காளிவெங்கட் மற்றும் பேச்சாலேயே சிரிக்க வைக்கும் சிங்கமுத்துவும் தான்.
அடுத்ததாக தீபாவளி ரிலீசில் இடம் பிடித்துள்ள படம் 'கடவுள் இருக்க குமாரு' இந்த படத்தில் காமெடிக்கு தான் முக்கியதுவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இதில் உள்ள காமெடி நடிகர்களின் கூட்டமே சாட்சி.
இந்த படத்தில் உள்ள காமெடி நடிகர்கள் யார் யார் என்றால்..... வானொலியில் இருந்து தற்போது ரசிக்கும் படி காமெடிகளை கொடுத்து வரும் RJ. பாலாஜி, தேசிய விருது வென்ற காமெடி நடிகர் தம்பி ராமைய்யா, இயக்குனர் பாலா படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகி தற்போது காமெடி நடிகராக கலக்கி வரும் மொட்டை ராஜேந்திரன்.
பில்டிங் ஸ்டராங் இல்லனாலும், போஸ்மென்ட் ஸ்டார்ங் ஆகா ஆக்கி காமெடியில் கலக்கும் மனோ பாலா, சிவகார்த்திகேயன் போலவே சின்னத்திரையில் கால் பதித்து இன்று காமெடியன்னாக வளர்ந்துள்ள ரோபோ ஷங்கர். சிங்கம் புலி மற்றும் MS. பாஸ்கர் என இதில் ஒரு காமெடி கூட்டமே நடிக்கிறது.
வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்பது பழமொழி, நாம் சிரிப்பிற்கு காரணமாக இருப்பவர்கள் இது போன்ற காமெடி நடிகர்கள் தான்.
தீபாவளியை புத்தாடை அணிந்து மட்டும் இல்லாமல் இவர்கள் நடித்து வெளியாகும் புது படங்களையும் பார்த்து கொண்டாடுவோம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.