14 கிலோ தங்கம் கடத்தி வந்த பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது

Published : Mar 05, 2025, 10:14 AM IST
14 கிலோ தங்கம் கடத்தி வந்த பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது

சுருக்கம்

துபாயில் இருந்து 14 கிலோ தங்கத்தை கடத்தி வந்த பிரபல கன்னட நடிகை, பெங்களுரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kannada Actress Ranya Rao Smuggling Gold : பிரபலமான கன்னட நடிகை ரான்யா ராவ் (Ranya Rao) விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 14 கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ரான்யாவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரான்யா துபாயிலிருந்து வந்ததாகவும், அவரது பெல்ட்டில் 14 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 800 கிராம் தங்க நகைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ரான்யா டிஜிபி ராமச்சந்திர ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி வெளியானதும், தென்னிந்தியத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

14 நாள் நீதிமன்ற காவலில் ரான்யா ராவ்

ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி, ரான்யா ராவ் திங்கள்கிழமை இரவு துபாயிலிருந்து திரும்பினார். கடந்த 15 நாட்களில் அவர் தொடர்ந்து 4 முறை துபாய் சென்றதால், விசாரணை அமைப்புகளுக்கு ரான்யா மீது ஏற்கனவே சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பெங்களூரு விமான நிலையம் வந்ததும், அவர் சோதனை செய்யப்பட்டார். அவர் நிறைய தங்கம் அணிந்திருந்ததும், சில தங்கக் கட்டிகளை தனது பெல்ட்டில் மறைத்து வைத்திருந்ததும் சோதனையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பின்னர், ரான்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசு வசதிகளைப் பயன்படுத்தி வந்த ரான்யா ராவ்

ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட மூத்த அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ நெறிமுறை சேவைகளைப் பயன்படுத்தி ரான்யா ராவ் தப்பித்து வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஜிபி மகள் என்பதால் அவருக்கு வழக்கமான சோதனை மட்டுமே நடத்தப்படுமாம். பின்னர் அவர் அரசு வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுவாராம்.

மேலும் வழியில் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ரான்யாவின் தந்தை கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவிடம் தொடர்பு கொண்டபோது, அவர் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ரான்யா நான்கு மாதங்களுக்கு முன்பு ஜதின் ஹுக்கரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் தன்னை சந்திக்க வரவில்லை என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... 2 நாளில் 1,000 ரூபாயை கடந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!