மாஸ் லுக்கில் மிரட்டும் சூர்யா! வெளியானது கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!!

By SG Balan  |  First Published Jul 23, 2023, 12:01 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மாஸான முன்னோட்ட வீடியோ சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 க்கு ரிலீஸ் ஆகியிருக்கிறது.


சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் கங்குவா திரைப்படத்தின் முன்னோட்டம் கிளிம்ப்ஸ் வீடியோ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சூர்யா பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைபயும் பெற்றுவருகிறது.

ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சூர்யா ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சூர்யா பிறந்தநாளுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இரண்டாம் வாரத்திலும் அசத்தும் மாவீரன்.. சிவகார்த்திகேயன் மாவீரனாக உருவானது எப்படி? வைரலாகும் வீடியோ!

சூர்யா நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அவரது பிறந்தநாள் முதல் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கங்குவா படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் மாஸ் காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த வீடியோவை சினிமா ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர்.

கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக அமைந்துள்ளது. கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். நட்டி நட்ராஜு வில்லனாக நடிக்கிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகை ரேகா லெஸ்பியனா? பெண் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்தார்.! சுயசரிதையால் வெடித்த சர்ச்சை!

click me!