பல பிரபலங்கள் ஜெயிலில் இருப்பார்கள்... உண்மையை சொல்ல நான் ரெடி... கங்கனா வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

Published : Aug 27, 2020, 09:07 PM IST
பல பிரபலங்கள் ஜெயிலில் இருப்பார்கள்... உண்மையை சொல்ல நான்   ரெடி... கங்கனா வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

சுருக்கம்

இந்நிலையில் சுஷாந்தின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடி வரும் நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் கருப்பு பக்கங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். 

 

 

அந்த புகாரில் ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து 50 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் பகீர் புகார்கள் குறிப்பிடப்பட்டன. இதனால் அமலாக்கத்துறை முன்பும் ரியா சக்ரபர்த்தி ஆஜராகி விளக்கம் கொடுத்தார். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ரியா சக்ரபர்த்திக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் அவர் மீது போதை பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

இதையும் படிங்க: இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !

இந்நிலையில் சுஷாந்தின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடி வரும் நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் கருப்பு பக்கங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்தால், போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு உதவ நான்  தயாராக இருக்கிறேன். சுஷாந்துக்கு சில டர்ட்டி ரகசியங்கள் தெரிந்திருக்கிறது அதனால் தான் அவரை கொலை செய்துவிட்டார்கள். திரைத்துறையில் மிகவும் பிரபலமான போதை வஸ்து கொக்கைன். அனைத்து பார்ட்டிகளிலும் அது பயன்படுத்தப்படுகிறது. இதை பிரபல நடிகையாக மாறிய பிறகு பார்ட்டிகளில் நானே கண்டேன். போதை தடுப்புப் பிரிவு பாலிவுட்டுக்குள் நுழைந்தால் பல பிரபலங்கள் ஜெயிலில் தான் இருப்பார்கள் எனக்கூறி பகீர் கிளப்பியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!