"வாயாடி" பாடல் மூலம் பிரபலமான பாடலாசிரியர் ஜி.கே.பி..!

By manimegalai aFirst Published Aug 29, 2018, 2:22 PM IST
Highlights

சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற "கம் னா கம்" பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான 'கனா' படத்தில் ஜி.கே.பி எழுதிய "வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியானது. 

இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி பாடியுள்ளனர்.

"வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியான கனம் முதல் இப்பாடலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமுக வளைத்தலங்களில் பிரபலம் ஆனது.

தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். "இப்படிபட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க தூண்டும், எனவே இந்த பாராட்டுகள் என்னை நான் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல தூண்டும் தூண்டுகோள்" என்றார் பாடலாசிரியர் ஜி.கே.பி.
 
click me!