
புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ‘தோழர்களாய் ஒன்றிணைவோம்’ என்று தெரிவித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நடிகர் நாசர் - கமீலா நாசர் தம்பதியின் மகன் பைசல் த.வெ.க.வில் உறுப்பினராக இணைந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. உடல்நலம் சரியில்லாத நிலையிலும் விஜய் கட்சியில் அவர் சேர்ந்திருக்கிறார். இது குறித்து அவரது தாய் கமீலா நாசரிர் பேசியிருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
”என்னுடைய பையன் சின்ன வயதில் இருந்தே விஜய் சாரோட வெறித்தனமான ரசிகன். சில வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு எங்களையே நினைவு இல்லாமல் இருந்த என் மகனுக்கு, விஜய் சார் மட்டும்தான் நினைவில் இருந்தார். அவன் குணமாக வேண்டும் என்பதற்காக விஜய் சார் எங்கள் வீட்டுக்கே வந்து பார்த்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்" என்று கமீலா நாசர் கூறியுள்ளார்.
ராக்கெட் ராணி! அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிக்குக் காரணமான தென்னிந்திய பெண் விஞ்ஞானி!
மேலும், "இன்று அவன் மீண்டு வந்திருப்பதற்கு விஜய் சார் ஒரு முக்கியக் காரணம். இப்போது விஜய் சார் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சியில் சேரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்ததை என் மகன் பார்த்து இம்ப்ரஸ் ஆகிட்டான். உடனே, கட்சியில் சேர்ந்தே ஆகணும்னு உற்சாகத்தோடு சொன்னான். அவன் விருப்பத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அவன் விருப்பம்தான் எங்கள் விருப்பம்" என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
விஜய் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அறிக்கை விட்டது பற்றிப் பேசியுள்ள அவர், "விஜய் சார் அரசியலுக்கு வந்ததை வரவேற்கணும். இப்போது இருக்கிற சூழலில் ஒரு மாற்றம் தேவை. சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கார். அதை, பாராட்டணும். விஜய் சார் இரண்டே வரியில் அறிக்கை விட்டிருக்கார்ன்னு கிண்டல் பண்றாங்க. அவர், இன்னும் அரசியலில் முழுசா இறங்கல. ஆனா, அவரோட கையெழுத்தோட இந்த அறிக்கை வந்ததை பெரிய விஷயமா பார்க்குறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
"சமூக வலைதளங்களில் மற்ற அரசியல்வாதிகளும் இரண்டு வரியில்தான் கருத்து சொல்றாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க?" என்று விஜய்க்கு ஆதரவாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். "கட்சி ஆரம்பிச்சிருக்கிறதுக்காக விஜய் சாரை நேரில் பார்த்து வாழ்த்து சொல்லணும். அவரை நிறைய இளைஞர்கள் ஃபாலோ பண்றாங்க. அவரோட கட்சியில் எங்கள் மகன் சேர்ந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான்” என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Jaya Thakur: அரசியல் கட்சிகளை மிரள வைத்த ஜெயா தாகூர்; யார் இவர்? என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.