பாரபச்சம் பார்க்காமல் கேள்வி கேட்டு கதறவிட்ட கமல்! பதில் சொல்ல முடியாமல் திருதிருன்னு முழிச்ச கவின்!

Published : Sep 21, 2019, 04:39 PM IST
பாரபச்சம் பார்க்காமல் கேள்வி கேட்டு கதறவிட்ட கமல்! பதில் சொல்ல முடியாமல் திருதிருன்னு முழிச்ச கவின்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவிலேயே இன்றைய தினம் கனவுகளை களைத்து, ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்றும், மற்றொரு போட்டியாளர் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக பைனலுக்கு செல்வார் என்றும் கூறியிருந்தார் கமல்.   

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவிலேயே இன்றைய தினம் கனவுகளை களைத்து, ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்றும், மற்றொரு போட்டியாளர் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக பைனலுக்கு செல்வார் என்றும் கூறியிருந்தார் கமல். 

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கவினை கேள்வி மேல் கேள்வி கேட்டு கதற வைத்துள்ளார். குறிப்பாக கமல் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கவின், திருதிருவென முழிப்பது, இந்த ப்ரோமோ பார்பவர்களையே சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது.

இந்த ப்ரோமோவில் எடுத்ததுமே, கமல்... டாஸ்கை டாஸ்காக பார்த்தீர்களா கவின் என கேள்வி எழுப்புகிறார். இதற்கு கவின் முதலில் முகேனும், லாஸ்லியாவும் கூட இடித்து கொண்டார்கள். ஆனால் சாண்டி மீது இடித்து கிழே விழும் போது நம்பையும் மீறி எமோஷன் வெளியே வரும் என கூறுகிறார்.

இதற்கு கமல், அப்படினா தர்ஷன் கையில் கூட தான் அடிப்பட்டுச்சி அப்போ எங்க போச்சி உங்க எமோஷன் என கேள்வி கேட்டு கவினை லாக் செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் கவின் திருதிருவென்று முழிக்கும் காட்சி தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி