அதிமுகவின் ஓவர் அட்டாக்...அவசர அவசரமாக லண்டனுக்கு ஓட்டம் பிடித்த விஜய்...

Published : Sep 21, 2019, 04:05 PM IST
அதிமுகவின் ஓவர் அட்டாக்...அவசர அவசரமாக லண்டனுக்கு ஓட்டம் பிடித்த விஜய்...

சுருக்கம்

குறிப்பாக நிகழ்ச்சிக்கு முறையான டிக்கட் எடுத்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் கலர் ஜெராக்ஸ் டிக்கட் வைத்திருந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டது, ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடிகள் தொடர்பாக நிறைய சர்ச்சையான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இன்னொரு பக்கம் குத்தலாக விஜய் பேசிய அரசியல் டயலாக்குகளால் எரிச்சலடைந்த அ.தி.மு.க.வினர் அவரை விளாசி வருகின்றனர்.

‘பிகில்’பட ஆடியோ நிகழ்ச்சி கலவரங்களும் அது தொடர்பான ரியாக்‌ஷன்களும் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில் குடும்பத்தினருடன் இரண்டு வாரங்கள் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு புறப்பட்டார் நடிகர் விஜய். அவர் விமான நிலையத்தில் செக் இன் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன.

நேற்று முன் தினம் நடைபெற்ற ‘பிகில்’பட ஆடியோ நிகழ்ச்சி தொடர்பாக பாஸிடிவான செய்திகளை விட நெகடிவான செய்திகளே அதிகம் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக நிகழ்ச்சிக்கு முறையான டிக்கட் எடுத்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் கலர் ஜெராக்ஸ் டிக்கட் வைத்திருந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டது, ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடிகள் தொடர்பாக நிறைய சர்ச்சையான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இன்னொரு பக்கம் குத்தலாக விஜய் பேசிய அரசியல் டயலாக்குகளால் எரிச்சலடைந்த அ.தி.மு.க.வினர் அவரை விளாசி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி தனது குடும்பத்தினருடன் ல்ண்டன் கிளம்பும் விஜய் அங்கிருந்து மேலும் சில நாடுகளுக்கு சுற்றுலா செல்லவிருப்பதாகவும், சுமார் 2 வாரங்களுக்கு ஓய்வெடுக்கச் செல்லும் விஜய் அக்டோபர் முதல் வாரம்தான் சென்னை திரும்புகிறார். ஏற்கனவே திட்டமிட்டபடி, விஜய் திங்களன்றுதான் புறப்படுவதாக இருந்ததாம். ஆனால் அ.திமுகவினரின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு சென்னையில் இருந்துகொண்டே பதிலளிக்காமல் இருந்தால் ‘பிகில்’பட ஓப்பனிங் உட்கார்ந்துவிடும் என்று முடிவெடுத்தே சென்னையை விட்டு அவசர அவசரமாக ஓட்டம் பிடித்திருக்கிறாராம் விஜய்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி