'இந்தியன் 2' படத்தின் பிரதான காட்சிகளை பார்த்த கமல்! இயக்குனர் ஷங்கருக்கு வழங்கிய பரிசு.. என்ன தெரியுமா?

By manimegalai a  |  First Published Jun 28, 2023, 5:55 PM IST

நடிகர் கமல்ஹாசன் இன்று, ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் பிரதான காட்சிகளை பார்த்ததாக கூறி, இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். இதுகுறித்த பதிவு மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் 'இந்தியன்'. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க, ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கமல், தந்தை - மகன் என இரு வேடங்களில் நடித்திருந்த நிலையில், இந்தியன் தாத்தா கதாபாத்திரம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்காது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல், காதல், காமெடி, ரொமான்ஸ் என்பதை தாண்டி நாட்டு பற்றையும் பறைசாற்றியது இப்படம்.

இப்படம் வெளியாகி தற்போது 27 வருடங்கள் ஆகும் நிலையில்... இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய நிலையில், கொரோனா பிரச்னை உட்பட அடுத்தடுத்து பல பிரச்சனை தலை தூங்கியதால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி கொண்டே சென்றது. எனவே ஒரு நிலையில் இயக்குனர் ஷங்கர், ராம் சாரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்க துவங்கினார்.

Tap to resize

Latest Videos

ஆற்றில் முக்காடோடு கவர்ச்சி குளியல் போடும் திவ்யா துரைசாமி! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போட்டோ ஷூட்!

'இந்தியன் 2' படத்தால் பல கோடி இழப்பு தங்களுக்கு ஏற்பட்டதாக கூறி, லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை செல்ல, ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய இரண்டு படங்களிலும் கவனம் செலுத்த செலுத்த உள்ளதாக அறிவித்தார். சமீபத்தில் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் தான் இயக்குனர் ஷங்கர், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மைக்காலமாக, சென்னையில் நடந்து வரும் நிலையில், விரைவில் ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று இந்தியன் 2 படம் குறித்து... கமல்ஹாசன் பதிவு ஒன்றை போட்டு, இயக்குனர் ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பரிசு ஒன்றையும் வழங்கியுளளார்.

இதுபற்றி கமல்ஹாசன் போட்டுள்ள பதிவில், ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன் என பதிவிட்டுள்ளார். மேலும் மிகவும் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் ஷங்கருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

தங்கலான் படப்பிடிப்பில் மூக்கில் காயத்தோடு விக்ரம்! அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிட்டாரே.. வைரலாகும் போட்டோஸ்!

இந்தியன் 2 படத்தில், கமலஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள நிலையில், விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, மனோபாலா, டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ் ஜி சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள்

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B

— Kamal Haasan (@ikamalhaasan)

 

click me!