இந்த படத்தில் முதல் முறையாக இசைப்புயல் இசையில் வைகைப்புயல் ஒரு பாடலை பாடியுள்ளார்
இதுவரை இரண்டு திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார் என்றபொழுதும் கோலிவுட் திரை உலகின் சென்சேஷனல் இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையல்ல. இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ், முதல் முறையாக கடந்த 2018ம் ஆண்டு கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் பா. ரஞ்சித்தின் நீளம் நிறுவனம் தயாரித்த "பரியேறும் பெருமாள்" என்ற திரைப்படத்தை இயக்கி பல தரப்பிலிருந்து வரவேற்புகளை பெற்றார்.
அதன் பிறகு கடந்த 2021ம் ஆண்டு தனுஷ், லால் மற்றும் யோகி பாபு நடிப்பில் "கர்ணன்" என்ற திரைப்படத்தை இயக்கி புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில் தற்போது அவருடைய கனவு திரைப்படமான "மாமன்னன்" திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆவதற்காக காத்திருக்கிறது.
இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு வைகைப்புயல் வடிவேலுவை பார்க்கவிருக்கிறோம் என்பதை இந்த படத்தில் இருந்து வெளியான பல போஸ்டர்களும், அண்மையில் வெளியான ட்ரெய்லரும் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த கதையில் நாயகன் உதயநிதி ஸ்டாலின், வில்லன் பாகத் பாசில் மற்றும் நாயகி கீர்த்தி சுரேஷ் என்று பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : "அப்பாவுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்தது" - இந்திரஜா ரோபோ சங்கர்!
ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் மக்களை கவரும் வண்ணமும் அமைந்துள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக இசைப்புயல் இசையில் வைகைப்புயல் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதையும் நாம் அறிவோம்.
தற்போது இந்த படத்தை பார்த்து முடித்துள்ள நடிகர் Dhanush, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார், அதில் மாரி செல்வராஜ் ஒரு "எமோஷன்" என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஒரு பெரிய Hug கொடுக்கவேண்டும் என்றும், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஐயா, பாகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய அனைவரும் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக இன்டர்வல் காட்சியில் திரையரங்கமே அதிரும் அளவிற்கு சிறப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இறுதியாக அழகிய இசையை கொடுத்த ஏ.ஆர் ரகுமான் சாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : பாட்டுக்கு 3 கோடி - கிறுகிறுக்கவைக்கும் "Singers-ன் சம்பளம்"