
சரியான திறமை இருந்தால் சின்னத்திரையில் மட்டுமல்ல, வெள்ளித்திரையிலும் பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து. சின்னத்திரை to வெள்ளித்திரைக்கு ஒரு அழகான பாதையை அமைத்துக்கொடுத்தவர் தான் நடிகர் சந்தானம்.
அவர் வரிசையில் இன்று பல முன்னணி நடிகர்கள் சின்ன திரையில் இருந்து வந்து வெள்ளித் திரையில் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் ஏறத்தாழ தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து புகழ்பெற்று, தற்பொழுது காமெடியன் கதாபாத்திரத்தில் இருந்து கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு மாறியுள்ள நடிகர் தான் யோகி பாபு.
இதையும் படியுங்கள் : தங்கலான் படப்பிடிப்பில் மூக்கில் காயத்தோடு விக்ரம் - வைரலாகும் போட்டோஸ்!
இவர் நடிப்பில் அனுதினமும் ஒரு திரைப்படம் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் யோகி பாபு. இந்நிலையில் சில தினங்களுக்கு அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது ஜெயிலர் படம் குறித்த சில தகவல்களை கூறினார்.
இதற்கு முன்பு நான் சூப்பர் ஸ்டாருடன் நடித்த தர்பார் படத்தில் எனக்கும் அவருக்கும் இடையே காமெடி சீன்கள் இருந்தாலும், அவை குறைந்த அளவிலேயே இருந்தது. இருப்பினும் அது எனக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் ஜெயிலர் படத்தில், படம் முழுக்க என்னுடைய காமெடி காட்சிகள் நிறைந்திருக்கும்.
வழக்கம்போல தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் யோகி பாபு.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.