‘நாயகன் மீண்டும் வரார்’ தெறிக்கும் பிஜிஎம் மற்றும் மாஸான புரோமோவுடன் வந்த கமலின் ‘விக்ரம்’ பட OTT ரிலீஸ் தேதி

By Asianet Tamil cinemaFirst Published Jun 29, 2022, 1:34 PM IST
Highlights

விக்ரம் படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேகமான புரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. 

நடிகர் கமல்ஹானின் கம்பேக் திரைப்படமாக அமைந்தது விக்ரம். கடந்த மாதம் 3-ந் தேதி வெளியான இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். பான் இந்தியா படமாக ரிலீசான இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களும் இப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து கொண்டாடினர்.

இதையும் படியுங்கள்... நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் கமிட்டியில் இருந்து வந்த அழைப்பு... படு குஷியில் ரசிகர்கள்

இதன்காரணமாக விக்ரம் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தற்போது 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஹாட்ரிக் ஹிட் கொடுக்குமா சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி? - வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் படு குஷியான நடிகர் கமல்ஹாசன், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் ஒன்றையும், நடிகர் சூர்யாவுக்கு ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இதுமட்டுமின்றி இப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்கையும் பரிசாக வழங்கினார் கமல்.

இதையும் படியுங்கள்... சேலையில் இம்புட்டு கவர்ச்சியா... ரெட் ஹாட் ஏஞ்சலாக ஜொலிக்கும் ராஷ்மிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

விக்ரம் படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேகமான புரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ‘நாயகன் மீண்டும் வரார்’ எனும் பிஜிஎம் ஒலிக்க கெத்தாக நடந்து வரும் கமல், துப்பாக்கியை எடுத்து சுடுவது போன்ற மாஸான காட்சி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பேசும் கமல் இப்படம் வருகிற ஜூலை 8-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறுகிறார். இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!