சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் வெங்கல்ராவ், தற்போது விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கல்ராவ். இவர் வடிவேலு உடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வடிவேலு - வெங்கல்ராவ் காம்போவில் வெளியான காமெடிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற ரஜினி.. அங்கிள் என கதறி அழுத மீனா- கலங்கிப்போன சூப்பர்ஸ்டார்
குறிப்பாக கந்தசாமி படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒன்றாகும். ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், வடிவேலு சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த காரணத்தால், வெங்கல் ராவுக்கு சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் எப்படி இறந்தார் தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய பரபரப்பு தகவல்
கடந்த சில ஆண்டுகளாக போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால், வறுமையில் வாடி வந்தார் வெங்கல்ராவ். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், தற்போது விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... மீனாவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த திருமணம் - அவரின் ரீ-எண்ட்ரியும்... வித்யாசாகரின் பங்களிப்பும்
நடிகர் வெங்கல்ராவ் விரைவில் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பூ ராமு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.