Kamal's Vikram Movie :முதன்முறையாக அனிருத் இசையில் பாடிய கமல்... விக்ரம் படத்தில் காத்திருக்கும் தரமான சம்பவம்

Published : May 10, 2022, 11:34 AM ISTUpdated : May 10, 2022, 12:40 PM IST
Kamal's Vikram Movie :முதன்முறையாக அனிருத் இசையில் பாடிய கமல்... விக்ரம் படத்தில் காத்திருக்கும் தரமான சம்பவம்

சுருக்கம்

Kamalhaasan : விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் விக்ரம். கமல் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷிவானி, நரேன், பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் தயாராகி உள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், தனது குருவான கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 11-ந் தேதி வெளியிடப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பத்தல பத்தல எனத்தொடங்கும் அப்பாடலை நடிகர் கமல்ஹாசனே எழுதி பாடி உள்ளதாக, இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அனிருத் இசையில் கமல்ஹாசன் பாடிய முதல் பாடலாக இது அமைந்துள்ளது. பாடல் பதிவின் போது எடுத்த புகைப்படங்களையும் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 15-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே அப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்.... மனைவியை பற்றி சிவகார்த்திகேயன் சொன்னதும்... கண்ணீர் விட்டு அழுத அருண் ராஜா - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!