பிரமாண்ட காட்சிகளுடன் வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ட்ரைலர்..

Kanmani P   | Asianet News
Published : May 09, 2022, 08:21 PM ISTUpdated : May 09, 2022, 08:27 PM IST
பிரமாண்ட காட்சிகளுடன் வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ட்ரைலர்..

சுருக்கம்

13 கால எதிர்பார்ப்பாக இருந்து வரும் அவதார் இரண்டாம் பாகத்தின் டீசர் மற்றும் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

டைட்டானிக் படத்தின் மூலம் உலக ரசிகர்களை ஈர்த்த ஜேம்ஸ் கேமரூன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் சினிமா வாழ்வின் ஒரு சகாப்தம் என்று அவதார் படத்தை கூறலாம்.  மொத்த ரசிகர்களையும்  கட்டி இழுத்த அனிமேஷன் படமான அவதார் உலகில் மிக அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த படம் அமெரிக்க மதிப்பில் 2500 மில்லியன் டாலர்களை வசூல் செய்து அசத்தி இருந்தது. முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் அப்பொழுதே இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். ஆனால் இந்த இரண்டாம் பாகம் உருவாக 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

சிறுவயதில் பார்த்த அவதார் முதல் பாகத்தின் அடுத்த பாகத்தைப் பார்க்க இன்றைய ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கின்றன.ர் அதன்படி சமீபத்தில் அவதார் இரண்டிற்கான அப்டேட்டும்  அதன் புதிய பெயரும் வெளியானது. அதன்படி இந்த பாகத்திற்கு 'தி வாட்டர் ஆஃபி வே ' என பெயரிடப்பட்டுள்ளது. முந்தைய பாகத்தில் முழுவதுமாகஒரு மேஜிக் வனத்திற்குள் நடப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் பாகத்தில்  கடற்கரை மற்றும் கடலுக்குள் நடக்கும் காட்சியாகவும் , கடல் விலங்குகளை வைத்து நடக்கும் சம்பவங்களை கொண்டதாகவும் இருக்கும் என தெரிகிறது.

இந்த படம் கடந்த 2020ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால் ரிலீஸ் தள்ளிபோனது. 20th செஞ்சுரி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கிட்டத்தட்ட 160 க்கும் மேற்பட்ட மொழிகளில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. அந்த  காட்சிகளை காண ஒரு பெரும் கூட்டமே திரண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பான இந்த காட்சிக்கு இவ்வளவு கூட்டமா என நெட்டிசன்கள் வாய் பிளந்தனர். இது குறித்த புகைப்படத்தை தயாரிப்பாளர் வெளியிட்டிருந்தார்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் கடந்த மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று தான் அது வெளியாகி உள்ளது. பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளும் , வியக்கத்தக்க மிதமிஞ்சிய கற்பனையில் பிரமிக்க வைக்கும் விலங்குகள் என ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது இந்த டிரெய்லர். ரசிகர்களை வெகுவாக ஈர்த்த அவதார் முன்னோட்டம் இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!