ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர் - ஆரூர்தாஸ் மறைவுக்கு கமல் இரங்கல்

By Ganesh AFirst Published Nov 21, 2022, 2:22 PM IST
Highlights

ஆரூர் தாஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், அவர் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர் என புகழாரம் சூட்டி உள்ளார்.

தமிழ் சினிமாவில் கதை, வசனத்திற்கு பெயர்போன பல ஜாம்பவான்கள் உள்ளனர். அப்படிப்பட்ட மிக முக்கியமானவர்களில் ஒருவர் தான் ஆரூர் தாஸ். 1931-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி அன்று திருவாரூரில் பிறந்த இவர், 1955-ம் ஆண்டு நாட்டியதாரா படத்தில் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றிய ஆரூர்தாஸுக்கு சிவாஜி கணேசனின் பாசமலர் திரைப்படம் தான் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பாசமலர் படத்தின் வெற்றியினால் சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றார் ஆரூர் தாஸ். இதுதவிர மொத்தம் ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றி புகழ்பெற்ற வசனகர்த்தாவாக விளங்கிய ஆரூர் தாஸ் நேற்று மாலை காலமானார்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!

ஆரூர் தாஸின் மறைவு செய்தி அறிந்ததும் மனமுடைந்து போன தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் உடலுக்கு இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் ஆரூர் தாஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் ஆரூர் தாஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும்கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார். 

ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும்கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.

— Kamal Haasan (@ikamalhaasan)

இதையும் படியுங்கள்... 3 வாரம் ஆகியும் குறையாத மவுசு... கலகத் தலைவன் படத்தை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் லவ் டுடே

click me!