Kamalhaasan Wished Siddharth : பிரபல நடிகர் சித்தார்த், மற்றும் பிரபல நடிகை அதிதி ராவ் ஆகிய இருவரும் அண்மையில் தங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆனது குறித்த தகவலை வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்திய சினிமாவின் முகமாக இருந்து வரும் கமல்ஹாசன் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் சில அழகிய தருணங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சில தினங்களுக்கு "Harry Potter And The Prisoner of Azkaban" போன்ற நல்ல பல படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்சோ குரோன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார் திரு. கமல்ஹாசன்.
அவர் மூன்று கோல்டன் குளோப்ஸ் மற்றும் ஐந்து அகாடமி விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்திப்பில் பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசை புயல் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது வருங்கால மனைவி அதிதி ராவ் ஹைதரியும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து தனது நினைவுகளை கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோரோடு இணைந்து விருந்து உண்டு மகிழ்ந்தார் நடிகர் கமல்ஹாசன். மணிரத்னம் இயக்கும் Thug Life படத்திற்கான ஒரு சந்திப்பாகவும் இது கருதப்படுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் அவருடைய இந்த Thug Life திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் விலகிய நிலையில், தற்போது துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தில் நடிக்க சிலம்பரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான படப்பிடிப்பு பணியில் தற்போது நடந்து வருகிறது.