Raghava Lawrence : DSP இசையில்.. விஷால் பட இயக்குனருடன் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ் - டைட்டில் என்ன தெரியுமா?

Ansgar R |  
Published : Apr 14, 2024, 04:47 PM IST
Raghava Lawrence : DSP இசையில்.. விஷால் பட இயக்குனருடன் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ் - டைட்டில் என்ன தெரியுமா?

சுருக்கம்

Raghava Lawrence : தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் திகழ்ந்து வருபவர் தான் ராகவா லாரன்ஸ், அவர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருக்கவுள்ளது.

சென்னை ராயபுரத்தில் கடந்த 1976 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் தான் ராகவா லாரன்ஸ். சிறு வயது முதலே நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் டான்ஸ் அசிஸ்டன்டாக பணியாற்ற துவங்கி, அதன் பிறகு நடன இயக்குனராக உருவெடுத்து, பின் சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

கடந்த 2004 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான "மாஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார். தமிழில் "ஸ்டைல்", "முனி", "காஞ்சனா 2", மாற்றும் "காஞ்சனா 3" உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். அதேபோல நடிகராகவும் பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவர் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார். 

தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த புரட்சி தளபதி... 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஷால் அறிவிப்பு

இந்நிலையில் "அதிகாரம்" மற்றும் "துர்கா" ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் அவர் நடித்து வரும் நிலையில் அவருடைய புது திரைப்படம் குறித்து அறிவிப்பு இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இது ராகவா லாரன்ஸ் அவர்களுடைய 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான "அயோக்கியா" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சத்யஜோதி மற்றும் கோல்ட் மைன் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ராகவா நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு "HUNTER" என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் லாரன்ஸின் திரை வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் எடுக்க போகும் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் திரிஷா ராஜ்ஜியம்.. சைலண்டாக மலையாளம் பக்கம் ஒதுங்கிய நயன் - லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த பட அப்டேட் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?