இந்தியன் 2 படம் குறித்து டக்கரான அப்டேட் கொடுத்த உலக நாயகன்! எகிறிய எதிர்பார்ப்பு!

Published : Mar 02, 2023, 12:15 AM ISTUpdated : Mar 02, 2023, 12:16 AM IST
இந்தியன் 2 படம் குறித்து டக்கரான அப்டேட் கொடுத்த உலக நாயகன்! எகிறிய எதிர்பார்ப்பு!

சுருக்கம்

இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இப்படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த 'விக்ரம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் ஃபார்முக்கு வந்துள்ளார். அரசியல் வேலைகள் ஒருபுறம் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தாலும், மற்றொரு புறம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில்  தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் படு பிசியாக நடித்து வருகிறார். 

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வந்த சூப்பர் ஹிட் படமான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. 

இந்நிலையில் 'இந்தியன் 2' படம் குறித்து, உலக நாயகன் கமல் ஹாசன் டக்கரான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் இந்தியன் 2 படத்தில்  அப்டேட் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது , சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் துவங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்காக படக்குழு, இரவு - பகல் பாராமல் தொடர்ந்து உழைத்து வருவதாகவும், எனவே விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து , ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என்பது போல் கூறியுள்ளார்.

தாஜ்மஹால் முன்பு காதல் மழை பொழிந்த... ஜெயம் ரவி - ஆர்த்தி..! சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ் பண்ணும் ரியல் ஜோடி!

இந்த தகவல் கமல்ஹாசனின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை,  லைகா புரொடக்‌ஷன்ஸ்-ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின்-சுபாஸ்கரன் தயாரிக்கின்றனர். கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். குறிப்பாக இப்படத்தில் 70 வயது பாட்டியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

கொசுவலையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு... ஆடை பட அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் மாளவிகா மோகனன்!

இந்த படத்துடன் சேர்த்து இயக்குனர் ஷங்கர் ராம் சரண் நடித்து வரும் RC 15 படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கமல் ஹாசன், 'இந்தியன் 2' படத்தை முடித்த பின்னர், மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க உள்ளார். இதற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அக்கா என்று கூட பார்க்கலயே: பாதகத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் போட்டுக் கொடுத்த சந்திரகலா!
நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!