பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான 'பதான்' திரைப்படம் குறித்து நடிகர் கமலஹாசன் தன்னுடைய கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில், கடைசியாக வெளிவந்த திரைப்படம் 'ஜீரோ ' 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், படு தோல்வி அடைந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக ஷாருக்கான் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் இன்று 'பதான்' திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாகவும், நடித்துள்ளனர். சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கே சவால் விடும் விதத்தில், இப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக ஷாருக்கானின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
அதே போல் மற்றொரு புறம், தீபிகா படுகோன்.. காவி நிற பிகினி உடை அணிந்து கவர்ச்சி ஆட்டம் போட்ட பாடல் இடம்பெற கூடாது என ஒருதரப்பினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில். இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால், இந்து அமைப்பை சேர்ந்தார்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து, திரையரங்குகள் முன்னர் போராட்டத்திலும் ஈடுபட்டு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன், 'பதான்' படம் குறித்து போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் குறித்து அவர் போட்டுள்ள பதிவில், 'பதான்' படம் குறித்து சிறந்த தகவல்களை கேட்டு வருவதாகவும், பதான் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே என தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 7000-திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hearing great reports about Pathan. Saket congratulates Pathan. Way to go brother
— Kamal Haasan (@ikamalhaasan)