
தோழமை மாநிலமான கேரளாவில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க நடிகர் கமல்ஹாசன் கேரளா விரைந்துள்ளார்
அதாவது கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக திருவனந்தபுரம் சென்ற நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரை சந்தித்து ஓணம் வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்காக ஓராண்டு காலம் காத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
அப்போது அரசியல் குறித்து பேசிய கமல், அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கேரளா வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதாவது அவருடைய பேச்சு தமிழகத்தில் அரசியல் ஒரு சாக்கடை போல் உள்ளதை சுட்டி காட்டும் விதமாக அமைந்திருந்தது. மேலும் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள கேரளா தான் செல்ல வேண்டுமா? அப்படியென்றால் தமிழகத்தில் அரசியல் எந்த நிலையில் இருகின்றது என்பதை அவர் குறிப்பிட்ட பதிலிலேயே தெரிந்துக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் கமலின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.